கோவையில் வரும் 14-ம் தேதி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் திறன் பயிற்சி பதிவு முகாம்

கோவை : கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் திறன் பயிற்சி பதிவு முகாம்/ தொழில் திறன் பயிலரங்கம் வரும் 14-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு நடக்கிறது.


கோவை : à®•ோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் திறன் பயிற்சி பதிவு முகாம்/ தொழில் திறன் பயிலரங்கம் வரும் 14-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு நடக்கிறது. 

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 14-ம் தேதி காலை 10 மணி முதல் 5 மணி வரை இந்தப் பயிலரங்கம் நடக்கிறது. அப்போது, ஆட்டோமொபைல், தொலைத்தொடர்பு, உணவு பதப்படுத்துதல், வங்கி நிதி சேவை (ம) காப்பீடு, சில்லறை வர்த்தகம், அழகு கலை, தையலகம், எம்ப்ராய்டரி, சி.என்.சி. மெஷின் ஆபரேட்டர், ஓட்டுநர் உள்பட 1,500-க்கும் மேற்பட்ட திறன்பயிற்சிகள் உள்ளன.

இந்த முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிப்பவர்களுக்கு, திறன் பயிற்சி காலம் 15 நாட்கள் முதல் 6 மாதம் வரை மேற்கொள்ளப்படும். பயிற்சி காலத்தில் நாள்தோறும் ரூ. 100 பயிற்சி பெறுபவர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும். பயிற்சியின் முடிவில் வேலைவாய்ப்பும், அரசு சான்றிதழ்களும் வழங்கப்படும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...