வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் கர்நாடகாவிற்கு இயக்கப்படும் ரயில்சேவைகள் ரத்து

கோவை : தென்மேற்கு ரயில்வே பகுதியான பெங்களூரூ பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, 9 மற்றும் 10-ம் தேதிகளில் சேலம் மார்க்கமாக கர்நாடகாவிற்கு இயக்கப்படும் ரயில்சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை : தென்மேற்கு ரயில்வே பகுதியான பெங்களூரூ பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, 9 மற்றும் 10-ம் தேதிகளில் சேலம் மார்க்கமாக கர்நாடகாவிற்கு இயக்கப்படும் ரயில்சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- வரும் 10-ம் தேதி இயக்கப்படவிருந்த ரயில் எண் : 12677 கே.எஸ்.ஆர். பெங்களூரூ - எர்ணாகுளம் ரயில் மற்றும் ரயில் எண் : 12678 எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர். பெங்களூரூ ஆகிய ரயில் சேவைகள் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, 9-ம் தேதி இயக்கப்படவிருந்த ரயில் எண் : 16236 மைசூரூ - தூத்துக்குடி ரயில், ரயில் எண் : 16235 தூத்துக்குடி - மைசூரூ ஆகிய ரயில் சேவைகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

 

10-ம் தேதி இயக்கப்படும் ரயில் எண் 56514 : பெங்களூரூ - காரைக்கால் பயணிகள் ரயிலின் சேவை, பெங்களூரூ - பனஸ்வாடி இடையே ரத்து செய்யப்படுகிறது. 

வரும் 9 மற்றும் 10 தேதிகளில் இயக்கப்படும் ரயில் எண் : 56513 காரைக்கால் - பெங்களூரூ ரயில், 10-ம் தேதி இயக்கப்படும் ரயில் எண் : 11014 கோவை - லோக்மாணிய திலக் முனையம் ரயில், 8 மற்றும் 9-ம் தேதிகளில் இயக்கப்படும் ரயில் எண் : 11013 லோக்மானிய திலக் முனையம் ரயில்கள் ஏலன்கா - யெஷ்வந்த்பூர் வழியாக திருப்பி விடப்படுகிறது. 

9-ம் தேதி இயக்கப்படும் ரயில் எண் : 17235 நாகர்கோவில் - கே.எஸ்.ஆர். பெங்களூரூ, ரயில் எண் : 16231 மயிலாடுதுறை - மைசூரூ எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ஜோலார்பேட்டை - திருப்பத்தூர் வழியாக மாற்றி இயக்கப்படுகிறது. வரும் 10-ம் தேதி இயக்கப்படும் ரயில் எண் :17235 கே.எஸ்.ஆர். பெங்களூரூ - நாகர்கோவில் ரயில் மற்றும் ரயில் எண் : 16232 மைசூரூ - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ஜோலார்பேட்டை - திருப்பத்தூர் வழியாக திருப்பிடப்படுகிறது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...