கோவையில் அரசு போட்டித்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை : கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அரசு தேர்விற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வரும் 23 -ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கோவை : கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அரசு தேர்விற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வரும் 23 -ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி -1 தேர்வுக்கான 139 பணிக்காலியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் 31 -ம் தேதி ஆகும். தேர்வு நடைபெறும் நாள் மார்ச் மாதம் 3 தேதி என்ற நிலையில், பட்டதாரிகள் சிறப்பாக தேர்வை எதிர் கொள்ள இலவச பயிற்சி வகுப்புகள் கோவையில் தொடங்குகிறது. 

இந்த பயிற்சி வகுப்புகள் கோவை மாவட்ட அலுவலகத்தில் காலை 10 மணியளவில் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கான பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும், தேவைப்படும் புத்தகங்களை தன்னார்வ பள்ளியிலும், வட்ட நூலகத்திலும் பெற்றுக் கொள்ளலாம். இங்கு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். 

இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அப்ளிகேசன் நகலை, புகைப்படம் ஆகியவற்றைக் கொண்டு வந்து நாளைக் கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பெயரை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...