கோவை மாநகரில் வரும் 21-ம் தேதி போக்குவரத்து மாற்றம்

கோவை : தைப்பூசத்தை முன்னிட்டு அருள்மிகு கோட்டை சங்கமேஸ்வரர் திருக்கோவில் தேர் ஊர்வலம் நாளை மறுநாள் நடைபெற இருப்பதால், கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை : à®¤à¯ˆà®ªà¯à®ªà¯‚சத்தை முன்னிட்டு அருள்மிகு கோட்டை சங்கமேஸ்வரர் திருக்கோவில் தேர் ஊர்வலம் நாளை மறுநாள் நடைபெற இருப்பதால், கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் (போக்குவரத்து) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :-

கோவை மாநகர் அருள்மிகு கோட்டை சங்கமேஸ்வரர் திருக்கோவில் திருவிழா தேர் ஊர்வலம் வரும் 21-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, அவினாசி ரோடு பழைய மேம்பாலம் மற்றும் ப்ரூக்பாண்ட் சாலையில் இருந்து வரும் கனரக வாகனங்கள் பெரிய கடைவீதி வழியாக உக்கடம், பாலக்காடு ரோடு செல்ல அனுமதியில்லை. அதற்கு பதிலாக ஜே.எம். பேக்கரி சந்திப்பு சென்று வலது பக்கம் திரும்பி அரசு கலைக் கல்லூரி சாலை வழியாக திருச்சி ரோடு கிளாசிக் டவர் வந்தோ அல்லது ரேஸ்கோர்ஸ் சாலை வழியாக சுங்கம் சந்திப்பு வந்தோ வாலாங்குளம் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.

திருச்சி ரோட்டில் இருந்து பெரியகடைவீதி, மணிக்கூண்டு, டவுன்ஹால் வழியாக செல்லும் அனைத்து வாகனங்கள் கிளாசிக் டவர், வாலாங்குளம் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.

மரக்கடை வழியாக என்.எச். ரோட்டில் இருந்து டவுன்ஹால் உக்கடம் செல்லும் அனைத்து வாகனங்களும் ஐந்து முக்கு வழியாக மணிக்கூண்டு அடைந்து, இலகுரக வாகனங்கள் வின்சென்ட் ரோடு வழியாக உக்கடம் செல்லலாம். பேருந்துகள் லங்கா கார்னர், திருச்சி ரோடு, கிளாசிக் டவர், வாலாங்குளம் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம். 

சுங்கம் பைபாஸ் ரோட்டில் இருந்து லிங்க் ரோடு வழியாகவும், உக்கடம் பைபாஸ் ரோட்டில் இருந்து வின்சென்ட் ரோடு வழியாகவும் கனரக வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. மேலும், கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதி, பெருமாள் கோவில் வீதி, டவுன் ஹாலில் இருந்து மணிக்கூண்டு வரை மற்றும் தேர் செல்லும் பாதையில் எந்த வாகனங்களும், தள்ளுவண்டிகளும், இருசக்கர வாகன பணிமனை வாகனங்களும் நிறுத்தக்கூடாது.

இதர வழித்தடங்களில் எந்தமாற்றமும் இல்லை. தற்போது, நடைமுறையில் உள்ளது போல வழக்கம் போல செல்லலாம். பொதுவான வாகன ஓட்டிகளும் இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும், இவ்வாறு கோவை மாநகர காவல் ஆணையர் கேட்டுக்கொண்டார். 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...