மார்ச் 31-ம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோவை மாநகராட்சி வரிவசூல் மையங்கள் செயல்படும்

கோவை : இந்த மாத இறுதி வரை உள்ள சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோவை மாநகராட்சியின் வரிவசூல் மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை : à®‡à®¨à¯à®¤ மாத இறுதி வரை உள்ள சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோவை மாநகராட்சியின் வரிவசூல் மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு 2018-19-ம் நிதியாண்டில் இரண்டாம் அரையாண்டு வரையிலான காலத்திற்கு மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி முதலிய வரிஇனங்களின் நிலுவை மற்றும் நடப்பு கேட்பு தொகைகளை பொதுமக்கள் உடனடியாக செலுத்த ஏதுவாக கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. 

அதாவது, மாநகராட்சி வரி வசூல் மையங்கள் இன்று முதல் மார்ச் 31-ம் தேதி வரை உள்ள அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட, மண்டல அலுவலகங்களில் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரையிலும் செயல்படும்.

மேலும், சொத்துவரி, குடிநீர் கட்டணம் நிலுவை வைத்துள்ள உரிமைதாரர்களின் கட்டிடங்களிலுள்ள குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே, மாநகராட்சியின் 5 மண்டலப் பகுதிகளில் சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் நிலுவை வைத்துள்ள குடியிருப்பு மற்றும் வணிக வளாக உரிமையாளர்கள் இந்த வசதியினை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

மேலும், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய காலியிடவரி, தொழில்வரி உள்ளிட்ட அனைத்து வரியினங்களையும் உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளை தவிர்க்குமாறும், மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர், இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் மரு.க.விஜயகார்த்திகேயன் அவர்கள் தெரிவித்துள்ளார். 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...