வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு : கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை : வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்களுக்குத் தமிழக அரசால் மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகக் கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கோவை : à®µà¯‡à®²à¯ˆà®µà®¾à®¯à¯à®ªà¯à®ªà®±à¯à®± படித்த இளைஞர்களுக்குத் தமிழக அரசால் மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகக் கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது :- வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

இதன்படி, 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300 மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200 வழங்கப்படும். இதைப் போலவே, 12 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ400, பட்டதாரி மற்றும் முதுநிலைபட்டதாரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600 மாதந்தோறும் வழங்கும் திட்டம் அமலில் உள்ளது. 

இந்த உதவித் தொகையை பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்போராக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மனுதாரருக்கு 1 ஆண்டு நிறைவடைந்தால் போதுமானது. இதனுடைய வயது வரம்பு, 2019 -ம் ஆண்டு மார்ச் 31 -ம் தேதி அன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்கு மிகாமலும், பிறர் 40 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

விண்ணப்பதாரர் குடும்ப வருமானம் ரூ.50 ஆயிரத்தை மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு விதி விலக்கு. தமிழகத்தில் கல்வி கற்று, 15 வருடங்கள் வசித்தவராக இருக்க வேண்டும். மேலும், முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும். கல்லூரிக்குச் சென்று பயிலாமல் அஞ்சல் வழிக் கல்வி (à®…) தொலைதூரக்கல்வி பயில்பவராக இருக்க வேண்டும். 

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற கோவை மாவட்ட வேலைவாய்ப்ப்ய் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். https://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திலும் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...