கோவை - பழனி இடையிலான சிறப்பு பயணிகள் ரயில் சேவை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

கோவை : கோவை - பழனி இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு பயணிகள் ரயிலின் சேவை ஜுலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோவை : கோவை - பழனி இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு பயணிகள் ரயிலின் சேவை ஜுலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ரயில் எண் : 06710/06709 பழனி - கோவை - பழனி பயணிகள் சிறப்பு ரயிலின் சேவை ஜன.16-ம் தேதியில் இருந்து ஜுலை 17-ம் தேதி வரை என மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து சேலம் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

சேவை நீட்டிக்கப்பட்டுள்ள நாட்களில் பழனியில் காலை 10.45-க்கு புறப்படும் ரயில் எண் : 06710, பழனி - கோவை பயணிகள் சிறப்பு ரயில், புஷ்பத்தூர், மடத்துக்குளம், மைவாடி சாலை, உடுமலைப்பேட்டை, கோமங்கலம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் உள்ளிட்ட நிறுத்தங்களில் நிறுத்தப்படும். பின்னர், கோவைக்கு சரியாக பிற்பகல் 2 மணிக்கு வந்தடைகிறது. 

இதேபோல, ரயில் எண் : 06709, கோவை - பழனி பயணிகள் சிறப்பு ரயில், கோவையில் இருந்து 01.45 மணிக்குப் புறப்படுகிறது. போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, மைவாடி சாலை, மடத்துக்குளம், புஷ்பத்தூர் ஆகிய நிறுத்தங்களில் நிறுத்தி இயக்கப்பட்டு, மாலை 04.40 மணிக்கு பழனியை சென்றடைகிறது. 

கோவை - பழனி இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு பயணிகள் ரயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதால், கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்ட மக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...