மாற்றுத்திறனாளிகளுக்கான விலையில்லா சக்கர நாற்காலிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு : கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை : பேட்டரியால் இயங்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான விலையில்லா சிறப்பு சக்கர நாற்காலிகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

கோவை : à®ªà¯‡à®Ÿà¯à®Ÿà®°à®¿à®¯à®¾à®²à¯ இயங்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான விலையில்லா சிறப்பு சக்கர நாற்காலிகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது ;- தசைச்சிதைவு நோய், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு இரண்டு கால்கள் மற்றும் இரண்டு கைகளும் செயலிழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு மூலம் பேட்டரியால் இயங்கும் விலையில்லா சிறப்பு சக்கர நாற்காலி வழங்கப்படவுள்ளது. 

இதையடுத்து, தேர்வு குழு மூலம், பெறப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில், விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தப்படும். அதன் பின் தகுதியுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு முதுநிலை பட்டியல் படி சக்கர நாற்காலி வழங்கப்படும். ஒருவேளை, அவர்கள் கல்வி பயிலுபவர்களாக இருப்பின், தலைமை ஆசிரியர், முதல்வர், துறைத்தலைவர் அவர்களிடம் கல்வி பயிலுவதற்கான சான்று பெறவேண்டும். 

பணிபுரிபவர்களாக இருந்தால் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் பணிபுரியும் சான்று மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் சான்று பெற வேண்டும். சுயதொழில் புரிபவர்களாக இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம், சுயதொழில் புரிபவர்கள் என சான்றுகள் பெற வேண்டும். அவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். 

மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம் ஆகியவற்றை அனுப்ப வேண்டும். இதில் 60 வயதிற்கு உட்பட்ட ஆண் மாற்றுத்திறனாளிகளும், 55 வயதிற்குட்பட்ட பெண் மாற்றுத்திறனாளிகளும் விண்ணப்பிக்கலாம்.இதற்கான விண்ணப்பப் படிவத்தை, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம். 

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 25 -ம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோவை என்ற முகவரிக்கு நேரடியாகவோ, அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...