மகாசிவராத்திரி மற்றும் வார இறுதிக்கான சிறப்பு ரயில் இயக்கம்

கோவை : மகாசிவராத்திரி மற்றும் வார இறுதி நாட்களில் அதிகரிக்கும் பயணிகளின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், சிறப்பு ரயில்களை சேலம் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை : மகாசிவராத்திரி மற்றும் வார இறுதி நாட்களில் அதிகரிக்கும் பயணிகளின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், சிறப்பு ரயில்களை சேலம் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- ரயில் எண் : 06007 சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் சிறப்பு கட்டண சிறப்பு ரயில், ஜன.,05, 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 7 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் காலை 11.05 மணிக்கு இந்த ரயில் நாகர்கோவில் சென்றடைகிறது. 

ரயில் எண் : 06008 நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் சிறப்பு கட்டண சிறப்பு ரயில், வரும் 6, 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் காலை 07.20 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடைகிறது. 

இதேபோல, ரயில் எண் : 06005 சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் சந்திப்பு சிறப்பு கட்டண சிறப்பு ரயில், மார்ச் 01, 08, 15, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 08.40 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் காலை 08.45 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பை சென்றடைகிறது. 

ரயில் எண் : 06006 எர்ணாகுளம் சந்திப்பு - சென்னை சென்ட்ரல் சிறப்பு கட்டண சிறப்பு ரயில், மார்ச் 03, 10, 17, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து மாலை 07 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் காலை 07.20 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடைகிறது. 

இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 08 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...