பொங்கல் விடுமுறையையொட்டி கோவையில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு

கோவை : பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊர் செல்லும் மக்களின் நலன் கருதி, கோவையில் இருந்து சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை : பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊர் செல்லும் மக்களின் நலன் கருதி, கோவையில் இருந்து சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக சேலம் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- ரயில் எண்: 02197 கோவை - ஜெபால்பூர் சிறப்பு கட்டண சிறப்பு ரயில், வரும் 7, 14, 21 மற்றும் 28 ஆகிய திங்கட்கிழமை நாட்களில் கோவையில் இருந்து மாலை 07.05 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயில் புதன்கிழமைகளில் காலை 10.20 மணிக்கு ஜபால்பூர் சென்றடைகிறது. 

இதேபோல, ரயில் எண்: 02193 திருநெல்வேலி - ஜாபல்பூர் சிறப்பு கட்டண சிறப்பு ரயில், வரும் 5, 12, 19 26 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய சனிக்கிழமை தேதிகளில் மாலை 4 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படுகிறது. இந்த ரயில், திங்கட்கிழமைகளில் ஜபால்பூர் சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...