பொறியியல் பணி காரணமாக நாளை ரயில் சேவையில் மாற்றம்

கருப்பூர் ரயில் நிலையத்தின் வழித்தடத்தில் பொறியியல் பணி நடைபெறுவதால் சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட ரயில் சேவையில் நாளை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கருப்பூர் ரயில் நிலையத்தின் வழித்தடத்தில் பொறியியல் பணி நடைபெறுவதால் சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட ரயில் சேவையில் நாளை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

பொறியியல் பணியையொட்டி நாளை (01-01-2018) மாற்றியமைக்கப்பட்ட ரயில்சேவையின் விபரங்கள் பின்வருமாறு :-

1) பிலாஸ்பூர் - எர்ணாகுளம் (22815) செல்லும் ரயில், விசாகபட்டினம் - கொல்லம் செல்லும் 07111 என்ற எண் கொண்ட சபரி சிறப்பு ரயில் ஆகியவை, தனுஷ்பேட்டை மற்றும் சேலம் நிலையத்திற்கிடையே நிறுத்தப்பட்டு 25 நிமிடங்கள் கழித்து இயக்கப்படும். 

2) சென்னை சென்ட்ரல் - கோவை (12675) செல்லும் கோவை எக்ஸ்பிரஸ், ஜோலார்பேட்டை மற்றும் சேலம் இடையே சுமார் 25 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு இயக்கப்படும். இதன் காரணமாக கோவையில் இருந்து சென்னை செல்லும் ரயில் 25 நிமிடங்கள் தாமதமாக புறப்படும். 

3) சென்னை - மங்களூர் மேற்கு கடற்கரை எக்ஸ்பிரஸ் ரயில் (22637) மொரப்பூர் மற்றும் பொம்மிடி இடையே 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இயக்கப்படும். 

4) சென்னை - கோவை செல்லும் சதாப்தி விரைவு ரயில் (12243) ஜோலார்பேட்டை மற்றும் சேலம் பிரிவுக்கிடையே 35 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு இயக்கப்படும். மேலும், இந்த ரயில், கோவை - சென்னை சதாப்தி விரைவு வண்டி (12244) புறப்பாட்டிற்காக 35 நிமிடங்கள் தாமதமாக்க புறப்படும். 

5) சேலம் - காட்பாடி (66020) ரயில் சேலத்துக்கும், ஜோலார்பேட்டைக்கும் இடையில் 30 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இயக்கப்படும்

நாளைய தினம் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் : 

1) காட்பாடி - சேலம் பயணிகள் ரயில் (66019), குறுகிய காலத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அது போலவே, சேலம் முதல் தின்னப்பட்டி நிலையம் செல்வதற்கான சேலம் - காட்பாடி பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...