டிச.,31-ம் தேதி சிறப்பு ஒருவழிப் பாதை ரயில் இயக்கம்

கோவை : புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்க வரும் டிச.31-ம் தேதி சிறப்பு ஒருவழிப்பாதை ரயில் இயக்கப்படுகிறது.

கோவை : புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்க வரும் டிச.31-ம் தேதி சிறப்பு ஒருவழிப்பாதை ரயில் இயக்கப்படுகிறது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து கோட்டயம், எர்ணாகுளம் டவுன், கோவை ரயில்நிலையம் வழியாக சென்னை சென்ட்ரலுக்கு வரும் டிச.,31-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

ரயில் எண் : 06014 திருவனந்தபுரம் சென்ட்ரல் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், வரும் 31-ம் தேதி பிற்பகல் 01.45 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து புறப்படுகிறது. மறுநாள் காலை (1-ம் தேதி) 09.45 மணிக்கு இந்த ரயில் சென்னை சென்ட்ரல் வந்தடைகிறது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...