கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாளை முதல் உதகை - கேத்தி வட்ட சுற்றுலா ரயில் இயக்கம்

நீலகிரி : கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உதகை - கேத்தி - உதகை இடையே வட்ட சுற்றுலாவிற்கான சிறப்பு ரயில் நாளை முதல் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு இயக்கப்படுகிறது.

நீலகிரி : கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உதகை - கேத்தி - உதகை இடையே வட்ட சுற்றுலாவிற்கான சிறப்பு ரயில் நாளை முதல் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு இயக்கப்படுகிறது. 

அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பிரீமியம் வட்டசுற்றுலா சேவைக்காக (06173/06174) உதகையில் இருந்து மதியம் 2:30 மணிக்கு புறப்பட்டு கேத்தியை 3 மணிக்கு ரயில் சென்றடையும். மதியம் 3:30 மணிக்கு புறப்பட்டு மாலை 4 மணிக்கு உதகைக்கு சென்றடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 30 நிமிடங்கள் கேத்தி ரயில்நிலையத்தின் எழில் கொஞ்சும் அழகை சுற்றுலாப் பயணிகள் சுற்றிப்பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உதகை - கேத்தி - உதகை இடையே வட்ட சுற்றுலாவிற்கான சிறப்பு ரயில் நாளை முதல் 29-ம் தேதி வரையில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு இயக்கப்படுகிறது. 

இதில், முதல் வகுப்பிற்கு ரூ. 400-ம், இரண்டாம் வகுப்பிற்கு ரூ. 200-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் 16 இருக்கைகள் கொண்ட ஒரு முதல் வகுப்பு, 36 இருக்கைகள் மற்றும் 30 இருக்கைகள் கொண்ட இரு இரண்டாம் வகுப்பு என 82 இருக்கைகளுடன் மூன்று பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலுக்கு முன்பதிவு செய்யும் வசதி இல்லை.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...