ரயில்களில் கற்பூரம், விளக்கு ஏற்றினால் 3 ஆண்டு சிறை : சேலம் தெற்கு ரயில்வே எச்சரிக்கை

கோவை : ரயில்களில் கற்பூரம் மற்றும் விளக்கு ஏற்றினால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் எச்சரித்துள்ளது.

கோவை  : ரயில்களில் கற்பூரம் மற்றும் விளக்கு ஏற்றினால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் எச்சரித்துள்ளது.

சிறப்பு ரயில்களில் பக்தர்கள் சிலர் விளக்கு மற்றும் கற்பூரங்களை ஏற்றி வைத்து வழிபடுவதாக ரயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே சட்டத்தின்படி, எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசுகள், சமையல் எரிவாயு உருளை, அமிலம், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை ரயில்களில் எடுத்து செல்லக்கூடாது.

எனவே, கற்பூரம், விளக்கு போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை ரயில்களில் பற்ற வைத்தால் தண்டிக்கப்படுவர். அந்த வகையில், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை எடுத்து செல்லும் பயணிகள் ரயில்வே சட்டம் 1989-ன்படி மூன்றாண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

அதேவேளையில், ரயில்களில் கற்பூரம் மற்றும் விளக்குகளைப் பற்ற வைக்கும் நபர்கள் குறித்து சக பயணிகள் உடனே பயணச்சீட்டு பரிசோதகர், ரயில் பெட்டி உதவியாளர்கள், ரயில் நிலைய மேலாளர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

மேலும் பயணிகள் 182 என்ற பாதுகாப்பு பிரிவு எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...