கோவை - சென்னை இடையே நாளை இயக்கப்படும் ரயில்கள் தாமதமாக இயக்கப்படும்

கோவை : பொறியியல் பணிகள் காரணமாக சேலம் மார்க்கமாக நாளை இயக்கப்படும் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக சேலம் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை : பொறியியல் பணிகள் காரணமாக சேலம் மார்க்கமாக நாளை இயக்கப்படும் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக சேலம் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரயில் எண் : 12516 கவுகாத்தி - திருவனந்தபுரம் 07110 எக்ஸ்பிரஸ் ரயில், சேலம் - ஜோலார்பேட்டை இடையே சுமார் 1 மணிநேரம் நிறுத்தி இயக்கப்படுகிறது. 

ரயில் எண் : 13352 போகாரோ எக்ஸ்பிரஸ் ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில், சேலம் - ஜோலார்பேட்டை இடையே சுமார் 40 நிமிடங்கள் நிறுத்தி இயக்கப்படுகிறது. 

ரயில் எண் : 16339 மும்பை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில், ஜோலார்பேட்டை -  சேலம் இடையே சுமார் 50 நிமிடங்கள் நிறுத்தப்படுகிறது. 

ரயில் எண் : 66019 காட்பாடி - சேலம் பயணிகள் ரயில், ஜோலார்பேட்டை - சேலம் இடையிலான லோகுர் நிறுத்தத்தில் ஒரு மணி நேரம் நிறுத்தப்படுகிறது. 

ரயில் எண் : 12675 சென்னை சென்ட்ரல்  - கோவை எக்ஸ்பிரஸ் ரயில், ஜோலார்பேட்டை -  சேலம் இடையே 35 நிமிடங்கள் தங்குகிறது. ரயில் எண் : 12675 கோவை - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் 35 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. 

 

ரயில் எண் : 12243 சென்னை சென்ட்ரல்  - கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில், ஜோலார்பேட்டை -  சேலம் இடையே 35 நிமிடங்கள் நிறுத்தப்படுகிறது. ரயில் எண் : 12244 கோவை - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் 35 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது

 

ரயில் எண் : 66020 சேலம் - காட்பாடி ரயில், 30 நிமிடங்கள் சேலம் - ஜோலார்பேட்டை இடையே நிறுத்தப்படுகிறது. 

 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...