பொறியியல் பணிகள் காரணமாக கரூர் - சேலம் இடையிலான ரயில்சேவையில் மாற்றம்

கோவை : பொறியியல் பணிகள் காரணமாக வரும் 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கரூர் - சேலம் இடையிலான ரயில்சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, கரூர் - சேலம் - கரூர் பயணிகள் ரயில் சேவை 22-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை : பொறியியல் பணிகள் காரணமாக வரும் 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கரூர் - சேலம் இடையிலான ரயில்சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, கரூர் - சேலம் - கரூர் பயணிகள் ரயில் சேவை 22-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- 

15-ம் தேதி ரயில்சேவையில் மாற்றம் செய்யப்பட்ட ரயில்களின் விபரம் :

ரயில் எண் : 07110 கொல்லம் - ஐதராபாத் சிறப்பு ரயில், சேலம் மற்றும் ஜோலார்பேட்டை நிறுத்தம் இடையே சுமார் 1 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. 

 

ரயில் எண் : 13352 பொகாரோ எக்ஸ்பிரஸ் ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில், சேலம் மற்றும் ஜோலார்பேட்டை நிறுத்தம் இடையே சுமார் 40 நிமிடங்கள் தங்கி செல்கிறது. 

ரயில் எண் : 16339 மும்பை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், திருப்பத்தூரில் ஒருமணி நேரம் நிறுத்தப்படுகிறது. 

 

ரயில் எண் : 16332 திருவனந்தபுரம் - மும்பை எக்ஸ்பிரஸ் ரயில், ஈரோடு மற்றும் சேலம் இடையே சுமார் 40 நிமிடங்கள் நிறுத்தப்படும். 

 

18-ம் தேதி ரயில்சேவையில் மாற்றம் செய்யப்பட்ட ரயில்களின் விபரம் :

ரயில் எண் : 66019 காட்பாடி - சேலம் பயணிகள் ரயில், ஜோலார்பேட்டை - சேலம் இடையே ஒருமணி நேரம் நிறுத்தப்படும். 

ரயில் எண் : 12675 சென்னை சென்ட்ரல் - கோவை எக்ஸ்பிரஸ், ஜோலார்பேட்டை மற்றும் சேலம் இடையே சுமார் 40 நிமிடங்கள் நிறுத்தப்படுகிறது. இதேபோல, ரயில் எண் : 12676 கோவை - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் சுமார் 40 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. 

 

ரயில் எண் : 22815 பிலாஷபூர் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில், ஜோலார் பேட்டை - சேலம் இடையே சுமார் 50 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. 

ரயில் எண் : 07142 கொல்லம் - ஐதராபாத் சிறப்பு ரயில், சேலம் ரயில்நிலையத்தில் சுமார் 25 நிமிடங்கள் நிறுத்தப்படும். 

ரயில் எண் : 16331 மும்பை - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில், திருப்பத்தூர் நிறுத்தத்தில் சுமார் 50 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. 

 

ரயில் எண் : 22637 மேற்கு கடற்கரை எக்ஸ்பிரஸ் சென்னை சென்ட்ரல் - மங்களூரூ எக்ஸ்பிரஸ், திருப்பத்தூர் நிறுத்தத்தில் சுமார் 15 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. 

 

ரயில் எண் : 56111 ஜோலார்பேட்டை - ஈரோடு பயணிகள் ரயில், பொம்மிடி ரயில்நிலையத்தில் சுமார் 10 நிமிடங்கள் நின்று செல்லும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...