சபரிமலை சீசனுக்காக ஜனவரியில் சிறப்பு ரயில்கள்

சேலம் : பக்தர்கள் அலைமோதும் சபரிமலையில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க தெற்கு ரயில்வே துறை சிறப்பு ரயில்களை இயக்கியுள்ளது.

சேலம் : பக்தர்கள் அலைமோதும் சபரிமலையில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க தெற்கு ரயில்வே துறை சிறப்பு ரயில்களை இயக்கியுள்ளது.

கொச்சுவேலி- ஹைதராபாத் சிறப்பு ரயில்

கொச்சுவேலி - ஹைதராபாத் சிறப்பு ரயில் (07116) வரும் ஜனவரி 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் கொச்சுவேலியில் இருந்து ஹைதராபாத் புறப்படுகிறது. இந்த ரயில் கொச்சுவேலியில் இருந்து காலை 7. 45 மணியளவில் புறப்பட்டு மறுநாள் மதியம் 2 மணியளவில் ஹைதராபாத்தைச் சென்றடைகிறது. 

இந்த ரயிலானது கொல்லம், காயன்குளம், செங்கன்னூர், திருவல்லா, எர்ணாகுளம், ஆலுவா, திரிசூர், ஒத்தபாலம், பால்கோட், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, குடூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, குண்டூர், பிடிகுருலா, நல்கொண்டா, செகந்தராபாத் போன்ற நிறுத்தங்களைக் கடந்து செல்கிறது.

 

எர்ணாகுளம் ஜங்சன் - ஹைதராபாத் சிறப்பு ரயில் 

எர்ணாகுளம் ஜங்சன் - ஹைதராபாத் சிறப்பு ரயில் வரும் (07118) வரும் ஜனவரி 03, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து ஹைதராபாத் புறப்படுகிறது. இந்த ரயில் எர்ணாகுளத்திலிருந்து இரவு 9.30 மணியளவில் புறப்பட்டு மறுநாள் இரவு 10.55 க்கு சென்றடைகிறது. 

இந்த ரயிலானது ஆலுவா, திரிசூர், ஒத்தபாலம், பால்கோட், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, குடூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, குண்டூர், பிடிகுருலா, நல்கொண்டா, செகந்தராபாத் ஆகிய வழித்தடங்களில் நின்று செல்கிறது. 

மேலும், இதற்கான முன்பதிவு டிசம்பர் 4-ம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...