நாளை முதல் அடுத்த 2 செவ்வாய்க்கிழமை ரயில்சேவையில் மாற்றம்

சேலம் : ஈரோடு - கரூர் இடையிலான ரயில்வே மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் காரணமாக நாளை மற்றும் 27-ம் தேதிகளில் (செவ்வாய்க்கிழமைகள்) இயக்கப்படும் ரயில்சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சேலம் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- 

நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயில்களின் விபரங்கள் : 

ரயில் எண் : 56320 கோவை - நாகர்கோவில் பயணிகள் ரயில் ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் வழியாக மாற்றி விடப்பட்டுள்ளது. ஈரோடு - கரூர் இடையிலான நிறுத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

ரயில் எண் : 56712 பாலக்காடு டவுன் - திருச்சி ரயில்நிலையம் பயணிகள் ரயில், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் வழியாக மாற்றி விடப்பட்டுள்ளது. ஈரோடு - கரூர் இடையிலான நிறுத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

பாதி ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விபரங்கள் : 

ரயில் எண் : 56825 ஈரோடு - திருநெல்வேலி பயணிகள் ரயிலின் சேவை, ஈரோடு - கரூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. 

ரயில் எண் : 56841 திருச்சி - ஈரோடு பயணிகள் கரூர் ரயில்நிலையத்தில் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்படும். கரூர் - ஈரோடு இடையிலான சேவை ரத்து செய்யப்படுகிறது.

ரயில் எண் : 56826 திருநெல்வேலி - ஈரோடு பயணிகள் ரயில், கரூர் ரயில்நிலையத்தில் சுமார் 35 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.

27-ம் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயில்களின் விபரங்கள் : 

ரயில் எண் : 56320 கோவை - நாகர்கோவில் பயணிகள் ரயில் ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் வழியாக மாற்றி விடப்பட்டுள்ளது. ஈரோடு - கரூர் இடையிலான நிறுத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

ரயில் எண் : 56712 பாலக்காடு டவுன் - திருச்சி ரயில்நிலையம் பயணிகள் ரயில், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் வழியாக மாற்றி விடப்பட்டுள்ளது. ஈரோடு - கரூர் இடையிலான நிறுத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

பாதி ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விபரங்கள் : 

ரயில் எண் : 56825 ஈரோடு - திருநெல்வேலி பயணிகள் ரயிலின் சேவை, ஈரோடு - கரூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. 

ரயில் எண் : 56841 திருச்சி - ஈரோடு பயணிகள் கரூர் ரயில்நிலையத்தில் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்படும். கரூர் - ஈரோடு இடையிலான சேவை ரத்து செய்யப்படுகிறது.

ரயில் எண் : 56846 ஈரோடு - ஜோலார்பேட்டை பயணிகள் ரயிலின், ஈரோடு - சேலம் இடையேயான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.   

ரயில் எண் : 16340 நாகர்கோவில் - மும்பை பயணிகள் ரயில், கரூர் - புகழுர் இடையே சுமார் 50 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.

ரயில் எண் : 56713 திருச்சி - பாலக்காடு டவுன் பயணிகள் ரயில், கரூரில் சுமார் 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...