கோவை - சேலம் பயணிகள் ரயிலின் சேவை நாளை முதல் 4 சனிக்கிழமைகளில் ரத்து

கோவை : பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை - சேலம் பயணிகள் ரயிலின் சேவை நாளை முதல் 4 சனிக்கிழமைகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.


கோவை : பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை - சேலம் பயணிகள் ரயிலின் சேவை நாளை முதல் 4 சனிக்கிழமைகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சேலம் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் எண் 66602 & 66603, கோவை - சேலம் - கோவை பயணிகள் ரயிலின் சேவை நவ.,17, 24 மற்றும் டிச.,01, 08 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல, பாலக்காடு டிவிசன் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொறியியல் பணிகளால், ரயில் எண் : 56650, கோவை - திருசூர் பயணிகள் ரயிலின் சேவை 16, 17, 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பாதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது, சொர்ணூர் - திருசூர் இடையிலான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக சேலம் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...