'கஜா' புயல் எச்சரிக்கையால் மதுரை - ராமேஸ்வரம் இடையிலான ஒஹா ரயில்சேவை ரத்து

சேலம் : கஜா புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஒஹா - ராமேஸ்வரம் இடையிலான வாராந்திர ரயிலின் பகுதி சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.


சேலம் : கஜா புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஒஹா - ராமேஸ்வரம் இடையிலான வாராந்திர ரயிலின் பகுதி சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள கஜா புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வரும் நிலையில், கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசும். மணிக்கு 80 கி.மீ. முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதற்கு வாய்ப்பு உள்ளது. புயல் கரையை கடக்கும்போது இந்த மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும். ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், ரயில் எண் 16734 ஒஹா - ராமேஸ்வரம் வாராந்திர ரயிலின் சேவை மதுரை - ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஓஹாவில் இருந்து நேற்று புறப்பட்ட இந்த ரயில், வரும் 15-ம் தேதி காலை 11.10 மணியளவில் சேலம் ரயில்நிலையம் வந்தடைகிறது. இதைத் தொடர்ந்து, மதுரை - ராமேஸ்வரம் இடையிலான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...