தீபாவளி பண்டிகை கூட்டத்தைச் சமாளிக்க சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் : தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு ஏற்படும் கூட்டத்தினை சமாளிப்பதற்காகச் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சேலம் : தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு ஏற்படும் கூட்டத்தினை சமாளிப்பதற்காகச் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

ரயில் எண்: 06047 சென்னை சென்ட்ரல் - கொல்லம் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து 19, 21, 26 மற்றும் 28-ம் தேதிகளில் இரவு 08.40 மணிக்கு புறப்படுகிறது. இந்த நாட்களின் அடுத்த நாட்களில் நண்பகல் 12 மணிக்கு கொல்லம் சென்றடைகிறது. 

ரயில் எண்: 06048 கொல்லம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு கட்டண சிறப்பு ரயில், கொல்லத்தில் இருந்து 20, 22, 27 மற்றும் 27 மற்றும் 29-ம் தேதிகளில் இரவு பிற்பகல் 3 மணிக்கு புறப்படுகிறது. இந்த நாட்களின் அடுத்த நாட்களில் காலை 09.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடைகிறது. 

 

கொல்லம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் :

ரயில் எண்: 06050 கொல்லம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் கொல்லத்தில் இருந்து 16 மற்றும் 23-ம் தேதிகளில் பிற்பகல் 3 மணிக்குப் புறப்படுகிறது. இந்த நாட்களின் அடுத்த நாட்களில் காலை 07.20 மணிக்கு  சென்னை சென்ட்ரல் சென்றடைகிறது. 




சென்னை சென்ட்ரல் - கொல்லம் சுவிதா சிறப்பு ரயில் :

ரயில் எண்: 82635 சென்னை சென்ட்ரல் - கொல்லம் சுவிதா சிறப்பு கட்டண சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து 16, 23, 30 மற்றும் டிச.,07, 14, 21 மற்றும் 28 தேதிகளில் இரவு 08.40 மணிக்கு புறப்படுகிறது. இந்த நாட்களின் அடுத்த நாட்களில் நண்பகல் 12 மணிக்கு கொல்லம் சென்றடைகிறது. 

ரயில் எண்: 82636 கொல்லம் - சென்னை சென்ட்ரல் சுவிதா சிறப்பு கட்டண சிறப்பு ரயில், கொல்லத்தில் இருந்து 18, 25 மற்றும் டிச., 02, 09 மற்றும் 30-ம் தேதிகளில் பிற்பகல் 03 மணிக்கு புறப்படுகிறது. இந்த நாட்களின் அடுத்த நாட்களில் காலை 07.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடைகிறது. இந்த ரயில்களின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...