தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கோவை - தாம்பரம் இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கம்

சேலம் : பண்டிகை கால கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் கோவை - தாம்பரம் இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


சேலம்  : பண்டிகை கால கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் கோவை - தாம்பரம் இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ரயில் எண் : 06053/06054 தாம்பரம் - கோவை - தாம்பரம்  முன்பதிவில்லாத பயணிகள் ரயில் இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயிலில் 2  இரண்டாம் கட்ட பெட்டிகளும், 12 பொதுப்பிரிவு பெட்டிகளும், 2 லக்கேஜ்களுக்கான பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன. 

ரயில் எண் : 06053 தாம்பரம் - கோவை முன்பதிவில்லாத சிறப்பு ரயில்,  3 மற்றும் 5-ம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து   à®•ாலை 07.45 மணிக்கு கோவையை நோக்கி புறப்படுகிறது.

ரயில் எண் : 06054 கோவை - தாம்பரம்  முன்பதிவில்லா சிறப்பு ரயில், 4 மற்றும் 7-ம் தேதிகளில் கோவையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படுகிறது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...