நாளை முதல் ரயில்களில் 'பேப்பர்-லெஸ்' பயணச்சீட்டு

கோவை: டிக்கெட் சேவைகளில் டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியை தென்னக ரயில்வே மேற்கொண்டுள்ளது. அதன்படி, மொபைல் பயன்பாட்டில் யூ.டி.எஸ் பயனாளிகள் இப்போது இந்திய ரயில்வேயில் எந்தவொரு நிலையிலும் மொபைல் டிக்கெட்ஸ் பெறலாம்.

இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், "பேப்பர்-லெஸ்" பயணச்சீட்டு அல்லது நகல் எடுக்கத்தக்க பயணச்சீட்டுகள் ஐந்து கிலோ மீட்டர் தொலைவுக்கு உட்பட்டதாகவே இருந்து வந்தது. 

தற்போது QR குறியீட்டு, ஸ்கேனிங் முறையைப் பயன்படுத்தி யூ.டி.எஸ் செயலி மூலம் எந்த ஒரு கிராமத்தில் இருக்கும் ரயில் நிலையத்திலும் இவ்வாறு பயணச்சீட்டை பெற முடியும். ஒவ்வொரு நிலையத்திற்கும் QR குறியீடு அனைத்து புக்கிங் அலுவலகங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த முறை நாளை (நவம்பர் 1) முதல் அமலுக்கு வருகிறது. இந்த சேவை மக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...