தண்டவாளம் பராமரிப்பு பணிகள் காரணமாக 26-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு ரயில்சேவையில் மாற்றம்

வரும் 26-ம் தேதி முதல் 27-ம் தேதி வரையில் பிற்பகல் 1.05 மணி முதல் மாலை 05.05 வரை சுமார் 4 மணி நேரம் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், ஒருசில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- அரக்கோணம் - ஜோலார்பேட்டை - திருப்பத்தூர் இடையே ரயில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. வரும் 26-ம் தேதி முதல் 27-ம் தேதி வரையில் பிற்பகல் 1.05 மணி முதல் மாலை 05.05 வரை சுமார் 4 மணி நேரம் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், ஒருசில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

26-ம் தேதி மாற்றம் செய்யப்பட்ட ரயில்கள் 

ரயில் எண்: 22637 சென்னை சென்ட்ரல் - மங்களூரூ மேற்கு கடற்கரை எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரலில் இருந்து நள்ளிரவு 12.05 மணிக்கு கிளம்புகிறது. ஜோலார் பேட்டையில் சுமார் 2 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்படுகிறது.

ரயில் எண் : 22665 கே.எஸ்.ஆர். பெங்களூரூ - கோவை உதய் எக்ஸ்பிரஸ் பெங்களூரூவில் இருந்து பிற்பகல் 02.15 மணிக்கு புறப்படுகிறது. சோமநாயக்கன்பட்டியில் சுமார் 30 நிமிடங்கள் இந்த ரயில் நிறுத்தி வைக்கப்படுகிறது.

ரயில் எண் 16339 : 24-ம் தேதி மும்பையில் இருந்து நள்ளிரவு 12.10 மணிக்கு புறப்பட்ட மும்பை சி.எஸ்.டி. - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், 26-ம் தேதி சோமநாயக்கன்பாளையத்தில் சுமார் 3 மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட இருக்கிறது. 

ரயில் எண் : 56111 ஜோலார்பேட்டை - ஈரோடு பயணிகள் ரயில், பிற்பகல் 03.10 மணிக்கு ஜோலார்பேட்டையில் இருந்து கிளம்புவதாக இருந்தது. ஆனால், 2.15 மணிநேரம் தாமதமாக மாலை 05.30 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. 

27-ம் தேதி மாற்றம் செய்யப்பட்ட ரயில்கள் :

28-ம் தேதி மாற்றம் செய்யப்பட்ட ரயில்கள் :

ரயில் எண் 07115 : ஐதராபாத் - கொச்சுவெலி ரயில், நாளை இரவு 9 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து புறப்படுகிறது. இந்த ரயில் ஜோலார்பேட்டையில் 3 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. 

ரயில் எண் : 56111 ஜோலார்பேட்டை - ஈரோடு பயணிகள் ரயில், பிற்பகல் 03.10 மணிக்கு ஜோலார்பேட்டையில் இருந்து கிளம்புவதாக இருந்தது. ஆனால், 2.15 மணிநேரம் தாமதமாக மாலை 05.30 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. 

இதனிடையே, ரயில் எண் : 22476 மற்றும் 22476 கோவை - ஹிசார் எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும் 30-ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகளுடன் இயக்கப்பட இருக்கிறது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...