வரும் 20-ம் தேதி முதல் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை அறிமுகம்

கோவை : கொச்சிவெளி - பனஸ்வாடி இடையிலான ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவை வரும் 20-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.

கோவை : கொச்சிவெளி - பனஸ்வாடி இடையிலான ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவை வரும் 20-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- ரயில் எண் : 06319, கொச்சிவெளி (கேரளா) - பனஸ்வாடி (பெங்களூரூ) இடையே ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் விடப்படுகிறது. வரும் 20-ம் காலை 11 மணிக்கு கொச்சிவெளி ரயில்நிலையத்தில் இருந்து மாநிலங்களின் சுற்றுலாக்களுக்கான மத்திய அமைச்சர் கே.ஜே. ஜோசப் இந்த சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைக்க இருக்கிறார். 

தொடக்க விழாவையொட்டி, அன்றைய நாட்களில் நெருக்கடி இல்லாத நேரங்களில் இயக்கப்படும் இந்த ரயில், கொல்லம், செங்கனூர், எர்ணாகுளம் டவுன், திருசூர், பாலக்காடு, கோவை, ஈரோடு, சேலம், பங்கர்பேட், வையிட்ஃபீல்ட் மற்றும் கிருஷ்ணராஜபுரம் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும்.

ஹம்சஃபர் எக்ஸ்பிரஸின் தினசரி சேவை 

ரயில் எண் : 16319, கொச்சிவெளி - பனஸ்வாடி இடையிலான ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் வாரத்திற்கு வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் (இரண்டு முறை) கொச்சிவெளியில் இருந்து மாலை 06.05 மணிக்கு புறப்படுகிறது. வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பனஸ்வாடிக்கு காலை 10.45 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயில் சேவை வரும் 25-ம் தேதி முதல் தொடங்குகிறது.

ரயில் எண் : 16320, கொச்சிவெளி - பனஸ்வாடி இடையிலான ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் வாரத்திற்கு வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (இரண்டு முறை) பனஸ்வாடி இருந்து இரவு 07.00 மணிக்கு புறப்படுகிறது. சனி மற்றும் திங்கட்கிழமைகளில் கொச்சிவெளிக்கு காலை 09.05 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயில்சேவை 21-ம் தேதி முதல் தொடங்குகிறது. 

மேற்கண்ட ரயில்களின் சேவைகளுக்கான முன்பதிவு நாளை காலை 08 மணி முதல் தொடங்குகிறது- 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...