கோவை - ஜாபல்பூர் இடையே வாராந்திர அதிவிரைவு ரயில் இயக்கம்

கோவை : பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் விதமாக கோவை - ஜாபல்பூர் இடையே வாராந்திர அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது.

கோவை : பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் விதமாக கோவை - ஜாபல்பூர் இடையே வாராந்திர அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- ரயில் எண்: 02193 திருநெல்வேலி - ஜாபல்பூர் வாராந்திர சிறப்பு கட்டண ரயில், திருநெல்வேலியில் இருந்து 13-ம் தேதி முதல் 29-ம் தேதி வரையிலான சனிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் திங்கட்கிழமை காலை 11.15 மணிக்கு ஜாபல்பூர் சென்றடைகிறது. 

ரயில் எண் : 02197 கோவை - ஜாபல்பூர் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில், 15-ம் தேதி முதல் 29-ம் தேதி வரையில் கோவையில் இருந்து இரவு மாலை 7 மணிக்கு திங்கட்கிழமைகளில் புறப்படுகிறது. இந்த ரயில் சனிக்கிழமைகளில் 12.45 மணிக்கு ஜாபல்பூர் சென்றடைகிறது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...