மின்சாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு கோவை மக்கள் 1912 எண்ணை தொடர்பு கொள்ளலாம்

கோவை : கோவையில் மழை மற்றும் வெள்ள பாதிப்புகளால் ஏற்படும் மின்சாரம் தொடர்பான பிரச்சனைகளுக்கு அணுக 1912 என்ற எண்ணை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

கோவை : à®•ோவையில் மழை மற்றும் வெள்ள பாதிப்புகளால் ஏற்படும் மின்சாரம் தொடர்பான பிரச்சனைகளுக்கு அணுக 1912 என்ற எண்ணை மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் நாளை அதீத கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் கொடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து, கோவையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு ஊஷார்நிலை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இதனிடையே, மழை காலத்தில் மின்சாரம் தொடர்பான பிரச்சினைகள், குறிப்பாக மின்கம்பங்கள் சாய்வது, மின்கம்பங்கள் பழுது, மின்சாரம் துண்டிப்பு போன்ற பிரச்சினை ஏற்பட்டால் கோவை மாவட்ட மக்கள் 1912 என்ற இலவச எண்ணிற்கு அழைக்கலாம் என மின்சாரத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோவை மின்சாரவாரிய முதன்மை என்ஜினியர் (Cheif engineer) மணி என்பவர் கூறுகையில், "கோவை மண்டலத்தில் மின்சாரம் பழுது தொடர்பாக இந்த எண்ணை மக்கள் அழைக்கலாம். இது 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும். மழை காலம் மட்டுமல்ல, எப்போது வேண்டுமானாலும் மக்கள் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்," என்றார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...