காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதிய லோகோவுடன் நாளை இயங்கும் நீலகிரி மலை ரயில்

நீலகிரி : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் விதமாக புதிய லோகோவுடன் (இலச்சினை) நிலக்கரி நீராவி என்ஜின் மூலமாக நீலகிரி மலை ரயில் நாளை இயக்கப்படுகிறது.

நீலகிரி : à®•ாந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் விதமாக புதிய லோகோவுடன் (இலச்சினை) நிலக்கரி நீராவி என்ஜின் மூலமாக நீலகிரி மலை ரயில் நாளை இயக்கப்படுகிறது. 

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினம், காந்தி ஜெயந்தி விழாவாக நாளை கொண்டாடப்படுகிறது. அரசு விடுமுறை தினம் என்பதால் நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் விதமாக புதிய லோகோவுடன் (இலச்சினை) நிலக்கரி நீராவி என்ஜின் மூலமாக நீலகிரி மலை ரயில் நாளை இயக்கப்படுகிறது. 

இது தொடர்பாக சேலம் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், மகிழ்வான பயணம் என்ற திட்டத்தின் கீழ் உதகையில் இருந்து கேத்தி வரை மலை ரயில் நாளை இயக்கப்படுகிறது. நிலக்கரி நீராவி என்ஜினுடன் அலங்கரிக்கப்பட்ட 2 ரயில் பெட்டிகள் பொருத்தப்படுகிறது. அதில், முதல்வகுப்பில் 40 இருக்கைகளும், இரண்டாவது வகுப்பில் 40 இருக்கைகள் என மொத்தம் 80 இருக்கைகள் உள்ளன. 

இந்த மகிழ்வான பயணமானது, நாளை (அக்.,02) உதகையில் இருந்து 10 மணிக்கு தொடங்குகிறது. 10.11 மணிக்கு லவ்டேலை மலை ரயில் சென்றடைகிறது. பின்னர், 10.13-க்கு அங்கிருந்து புறப்பட்டு, 10.30 மணிக்கு கேத்தியை ரயில் அடைகிறது. பின்னர், கேத்தி ரயில் நிலையத்தில் இருந்து 11 மணிக்கு மீண்டும் புறப்படும் மலை ரயில் 11.30 மணிக்கு உதகை வந்தடைகிறது. சுழற்சி முறைப் பயணத்தின் போது, சுமார் 30 நிமிடங்கள் சுற்றுலாப் பயணிகள் கேத்தி ரயில்நிலையத்தில் செலவிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வகுப்பு கட்டமணமாக ரூ. 400-ம், 2-ம் வகுப்பு கட்டணமாக ரூ. 300-ம் வசூலிக்கப்படுகிறது. இந்த மலை ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு சுமார் ரூ. 100 மதிப்புடைய பொருட்கள் வழங்கப்பட இருக்கின்றன. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...