சென்னையில் இருந்து நாகர்கோவில், எர்ணாகுளத்திற்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

கோவை : பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்க சென்னையில் இருந்து நாகர்கோவில், எர்ணாகுளத்திற்கு சிறப்பு ரயில்களை சேலம் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :-


கோவை : பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்க சென்னையில் இருந்து நாகர்கோவில், எர்ணாகுளத்திற்கு சிறப்பு ரயில்களை சேலம் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :-

ரயில் எண் : 06007 சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் சிறப்பு கட்டண ரயில், அக்டோபர் 2 மற்றும் 9-ம் தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 07 மணிக்கு புறப்படும். அவ்வாறு செல்லும் ரயில் மறுநாள் காலை 11.05 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். 

ரயில் எண் : 06008 நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் சிறப்பு கட்டண ரயில் அக்டோபர் 3 மற்றும் 10-ம் தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து மாலை 05 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 07.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

இந்த ரயிலில் 3 குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், 9 படுக்கையறையுடன் கூடிய பெட்டிகளும், பொதுப் பிரிவில் 6 பெட்டிகளும், லக்கேஜுக்கு 2 பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன. 

ரயில் நிறுத்துமிடங்கள் : அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி மற்றும் வள்ளியூர்.

ரயில் எண் (06005/06006) சென்னை - எர்ணாகுளம் சிறப்பு கட்டண ரயில் வரும் அக்டோபர் 5-ம் தேதி இரவு 8.40 மணிக்கு சென்னை சென்ட்ரல்லில் இருந்து கிளம்புகிறது. அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஒத்தபாலம், திருசூர், அலுவா வழியாக மறுநாள் காலை 08.45 மணிக்கு எர்ணாகுளம் ரயில்நிலையம் சென்றடைகிறது. 

இதே ரயில், 7-ம் தேதி எர்ணாகுளம் டவுன், அலுவா, திருசூர், ஒத்தபாலம், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் மற்றும் பெரம்பலூர் வழியாக சென்னைக்கு மறுநாள் காலை 07.20 மணிக்கு வந்தடைகிறது.

இந்த ரயிலில் 3 குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், 12 படுக்கையறையுடன் கூடிய பெட்டிகளும், லக்கேஜுக்கு 2 பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன. 

மேலும், காட்பாடி வழியாக எர்ணாகுளம் ரயில்நிலையத்தில் இருந்து ஐதராபாத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ரயில் எண் : 07118 எர்ணாகுளம் ரயில்நிலையம் - ஐதராபாத் சிறப்பு கட்டண ரயில் எர்ணாகுளத்தில் இருந்து வரும் அக்., 4-ம் தேதி இரவு 09.30 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் இரவு 10.55 மணிக்கு ஐதராபத்தை சென்றடைகிறது. 

இதேபோல காட்பாடி வழியாக கொச்சிவெலியில் இருந்து ஐதராபத்திற்கு சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படுகிறது. ரயில் எண் 07116 என்ற எண் கொண்ட இந்த ரயில் அக்., 8-ம் தேதி கொச்சிவெலியில் இருந்து காலை 07.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 2 மணிக்கு ஐதராபாத் சென்றடைகிறது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...