சொத்து வரி திருத்தம் : நவம்பர் 24-ம் தேதிக்குள் சொத்து விபரங்களை தாக்கல் செய்ய மாநகராட்சி அறிவிப்பு

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சொத்துக்களின் உரிமையாளர்கள், தங்களின் சொத்துவரி சுயமதிப்பீடு விவர அறிக்கையை வரும் நவம்பர் 24-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

கோவை: à®•ோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சொத்துக்களின் உரிமையாளர்கள், தங்களின் சொத்துவரி சுயமதிப்பீடு விவர அறிக்கையை வரும் நவம்பர் 24-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- சொத்து வரி சீராய்வு பணி தொடங்கப்பட உள்ளதால் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சொத்துக்களின் உரிமையாளர்கள், குடியிருப்போர், குத்தகைக்காரர்கள் அவர்கள் வசம் உள்ள சொத்துக்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய சொத்துவரி சுயமதிப்பீடு விபர அறிக்கையை வரும் நவம்பர் 24-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். 

குறிப்பிட்ட தேதிக்குள் சொத்துவரி சுயமதிப்பீடு விபர அறிக்கையை தாக்கல் செய்யாத மதிப்பீட்டாளர்களின் சொத்துக்கள், ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் சொத்து வரி மதிப்பீடு செய்யப்படும்.

சொத்து வரி சுயமதிப்பீடு விபர அறிக்கையில் தாக்கல் செய்துள்ள விவரங்களில் ஏதேனும் வேறுபாடுகள் காணப்பட்டால், அது தொடர்பாக ஆணையாளரால் சொத்து உரிமையாளர்களுக்கு தகுந்த வாய்ப்புகள் வழங்கப்படும். 

பின்னர், சொத்து உரிமையாளர்களிடம் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு மற்றும் உபயோகம் குறித்து ஆட்சேபனை கோரப்பட்டு, அதன் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்ட காலத்திலிருந்து மறுமதிப்பீடு செய்யப்பட்டு, சொத்துவரி கேட்பு முடிவு செய்யப்படும்.

சொத்து வரி சுயமதிப்பீடு அறிக்கைக்காண படிவத்தை மாநகராட்சி அலுவலகம் அல்லது மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் நேரடியாக பெற்று சமர்ப்பிக்கலாம் அல்லது மாநகராட்சி இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பூர்த்தி செய்யப்பட்ட சொத்து வரி சுயமதிப்பீட்டு அறிக்கையை நேரடியாகவோ, தபால் மூலமாகவோ அல்லது இணையவெளி மூலமாகவும், அக்டோபர் 24-ம் தேதி முதல் நவம்பர் 24-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...