2019-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று கொண்டாடுவதற்கு ஏதுவாக, ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.


அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று கொண்டாடுவதற்கு ஏதுவாக, ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகின்ற 2019 ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. குறைந்தது 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதால் வெளியூர்களில் பணிபுரியும் லட்சக்கணக்கானோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடுவர். கட்டணம், நேரம் விரயம் தவிர்ப்பதற்காக பெரும்பாலானோர் ரயில் பயணங்களை தேர்வு செய்கின்றனர். அவர்களின் வசதிக்காக ஜனவரி 11-ஆம் தேதிக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

ஏராளமான பயணிகள் ரயில் நிலைய கவுண்ட்டர்களிலும், ஆன்லைன் வாயிலாகவும் தங்களின் இருக்கைகளை உறுதி செய்து வருகின்றனர்.இதேபோல, 12-ஆம் தேதிக்கான முன்பதிவு நாளையும், 13ஆம் தேதிக்கு நாளை மறுநாளும், 14ஆம் தேதிக்கு ஞாயிற்றுக்கிழமையும் நடக்கிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...