பொறியியல் பணிகள் காரணமாக நாளை இயங்கவிருந்த கோவை - சேலம் பயணிகள் ரயில் ரத்து

ஈரோடு ரயில் நிலையம் அருகே மேற்கொள்ளப்பட்டு வரும் பொறியியல் பணிகள் காரணமாக செப்.,04 (நாளை), இயக்கப்பட வேண்டிய கோவை - சேலம் பயணிகள் ரயில்சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு ரயில் நிலையம் அருகே மேற்கொள்ளப்பட்டு வரும் பொறியியல் பணிகள் காரணமாக செப்.,04 (நாளை), இயக்கப்பட வேண்டிய கோவை - சேலம் பயணிகள் ரயில்சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சேலம் தெற்கு ரயில்வே விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- இதேபோல, டேனிஷ்பேட்டை அருகே மேற்கொள்ளப்படவிருக்கும் பொறியியல் பணிகள் காரணமாக நாளை (செப்.,04) முதல் 20-ம் தேதி வரை சேலம் வழித்தடத்தில் இயங்கும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

செப்.,04, செப்.,11 மற்றும் செப்., 18-ம் தேதிகளில் இயங்கும் ரயில் எண்: 22815 பிலாஷபூர் - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ஜோலார்பேட்டையில் கூடுதலாக 45 நிமிடங்கள் தங்கி செல்லும்.

செப்.,05, செப்.,12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் ரயில் எண்: 22619 பிலாஷபூர் - திருநெல்வேலி வாராந்திர ரயில் ஜோலார்பேட்டையில் கூடுதலாக 45 நிமிடங்களும், சேலம் ரயில்நிலையத்தில் கூடுதலாக 40 நிமிடங்களும் நிறுத்தப்படும்.

செப்.,09, செப்.,16 ஆகிய தேதிகளில் இயங்கும் ரயில் எண்: 07115 ஐதராபாத் - கொச்சுவெலி வாராந்திர சிறப்பு ரயில் ஜோலார்பேட்டையில கூடுதலாக 45 நிமிடங்கள் தங்கி செல்லும்.

ரயில்சேவை மாற்றம் செய்யப்பட்ட ரயில்கள் : 

மதுரை கோட்டத்திற்குப்பட்ட பகுதிகளில் உள்ள சுரங்கப்பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக 05-ம் தேதி சேலம் மார்க்கமாக செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

ரயில் எண் : 56320 கோவை - நாகர்கோவில் அதிவிரைவு பயணிகள் ரயிலின் சேவை, மதுரை - சாத்தூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. 

ரயில் எண் : 56319 பயணிகள் ரயில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 01.40 மணிக்கு பதிலாக 03.25 மணிக்கு கோவைக்கு புறப்பட்டுச் செல்லும்.

 

நாளை (செப்.,04) தாமதமாக இயக்கப்படும் ரயில்களின் விபரம் : ரயில் எண்:56846 ஈரோடு - ஜோலார்பேட்டை ரயில், ரயில் எண்:6713 திருச்சி - பாலக்காடு டவுன் பயணிகள் ரயில், ரயில் எண்: 12970 ஜெய்ப்பூர் - கோவை அதிவிரைவு எக்ஸ்பிரஸ், ரயில் எண்: 13352 ஆலப்புழா - டாடா/ தன்பாத் போகரோ எக்ஸ்பிரஸ், ரயில் எண்: 12678 எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரூ இன்டர்சிட்டி, ரயில் எண்: 56846 ஈரோடு - ஜோலார்பேட்டை ரயில் ஆகிய ரயில்களின் சேவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

செப்.,06 தாமதமாக இயக்கப்படும் ரயில்களின் விபரம் :ரயில் எண்:6713 திருச்சி - பாலக்காடு டவுன் பயணிகள் ரயில், ரயில் எண்: 12970 ஜெய்ப்பூர் - கோவை அதிவிரைவு எக்ஸ்பிரஸ், ரயில் எண்: 13352 ஆலப்புழா - டாடா/ தன்பாத் போகரோ எக்ஸ்பிரஸ், ரயில் எண்: 12678 எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரூ இன்டர்சிட்டி, ரயில் எண்: 56846 ஈரோடு - ஜோலார்பேட்டை ரயில். 

செப்.,08 தாமதமாக இயக்கப்படும் ரயில்களின் விபரம்: ரயில் எண்:56713 திருச்சி - பாலக்காடு டவுன் பயணிகள் ரயில், எண்: 56846 ஈரோடு - ஜோலார்பேட்டை ரயில், ரயில் எண்:56842 ஈரோடு - திருச்சி சந்திப்பு ரயில் ஆகிய ரயில்கள் தாமதாக இயக்கப்படும். 

செப்.,10 தாமதமாக இயக்கப்படும் ரயில்களின் விபரம்: ரயில் எண்:6713 திருச்சி - பாலக்காடு டவுன் பயணிகள் ரயில், ரயில் எண்: 56846 ஈரோடு - ஜோலார்பேட்டை ரயில், ரயில் எண்:56842 ஈரோடு - திருச்சி சந்திப்பு ரயில், ஆகியவையாகும். மேலும், ரயில் சேவைகளின் மாற்றம் குறித்து அறிய ரயில்வேத்துறையின் இணையதளப்பக்கத்தை தொடர்பு கொள்ளலாம். 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...