ஆக.,29 மற்றும் செப்.,05-ம் தேதிகளில் இயக்கப்படும் ரயில் சேவைகளில் மாற்றம்

விருதுநகர் - தலையுத்து நிறுத்தங்களுக்கு இடையிலான ரயில் தடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரமரிப்பு பணிகள் காரணமாக நாளை மற்றும் செப்., 05 ஆகிய தேதிகளில் சேலம் வழியாக இயக்கப்படும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் - தலையுத்து நிறுத்தங்களுக்கு இடையிலான ரயில் தடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரமரிப்பு பணிகள் காரணமாக நாளை மற்றும் செப்., 05 ஆகிய தேதிகளில் சேலம் வழியாக இயக்கப்படும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் :- ரயில் எண் (56319) நாகர்கோவில் - கோவை பயணிகள் ரயில், சாத்தூர் - மதுரை இடையில் மட்டுமே இயக்கப்படும். மேற்கொண்டு இந்த ரயில், மீண்டும் சாத்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கே திட்டமிடப்பட்ட நேரத்தில் இயக்கப்படும். 

இதேபோல, ரயில் எண் (56320) கோவை - நாகர்கோவில் பயணிகள் ரயிலின் சேவையானது, மதுரை - சாத்தூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், மதுரை - கோவை எக்ஸ்பிரஸ் மாலை 03.25 மணிக்கு கோவையை நோக்கி இயக்கப்படும்.

பாலக்காடு எல்லைக்குட்பட்ட பள்ளிபுரம் - குட்டிபுரம் பாதையில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், சேலம் மார்க்கமாக வரும் 30-ம் தேதி இயக்கப்படும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ரயில் எண் : (56323/324) - கோவை சந்திப்பு - மங்களூரூ சந்திப்பு பயணிகள் ரயிலின் சேவை, கண்ணூர் - சொர்ணூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...