சென்னை - எர்ணாகுளம் இடையே சிறப்பு கட்டண ரயில் அறிவிப்பு

சென்னை - எர்ணாகுளம் இடையே வரும் சிறப்பு கட்டண ரயில் வரும் செப்., 14-ம் தேதி இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை - எர்ணாகுளம் இடையே வரும் சிறப்பு கட்டண ரயில் வரும் செப்., 14-ம் தேதி இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- ரயில் எண் (06005/06006) சென்னை - எர்ணாகுளம் சிறப்பு கட்டண ரயில் வரும் செப்., 14-ம் தேதி இரவு 8 மணிக்கு சென்னை சென்ட்ரல்லில் இருந்து கிளம்புகிறது. அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஒத்தபாலம், திருசூர், அலுவா வழியாக மறுநாள் காலை 08.45 மணிக்கு எர்ணாகுளம் ரயில்நிலையம் சென்றடைகிறது. 

இதே ரயில், 30-ம் தேதி எர்ணாகுளம் டவுன், அலுவா, திருசூர், ஒத்தபாலம், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் மற்றும் பெரம்பலூர் வழியாக சென்னைக்கு மறுநாள் காலை 07.20 மணிக்கு வந்தடைகிறது.

ரயில் எண்: (82609/82610) சென்னை எழும்பூர் - திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சுவிதா சிறப்பு ரயில், சென்னை எழும்பூரில் செப்., 12-ம் தேதி இரவு 10.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் கோவில்பட்டி வழியாக மறுநாள் காலை 10.30 மணிக்கு திருநெல்வேலிக்கு சென்றடையும்.

இதே ரயில், அக்.,2-ம் தேதி கோவில்பட்டி, சத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் மாம்பலம் வழியாக சென்னை எழும்பூருக்கு மாலை 03.15 மணிக்கு மறுநாள் வந்தடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 08 மணி முதல் தொடங்குகிறது. 

இதனிடையே, இன்று இயக்கப்படவிருந்த இணைப்பு ரயில் ரத்து செய்யப்பட்டதால், நாளை (ஆக.,28) இயங்கவிருந்த ரயில் எண் (16512) கண்ணூர் - கே.எஸ்.ஆர்., பெங்களூரூ எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...