எர்ணாகுளம் - நந்தேடு இடையே சிறப்பு கட்டண ரயில் அறிவிப்பு

கேரளா மாநிலம் எர்ணாகுளம் - மகாராஷ்டிர மாநிலம் நந்தேடு இரையே சிறப்பு கட்டண ரயில் வரும் 27-ம் தேதி முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் - மகாராஷ்டிர மாநிலம் நந்தேடு இரையே சிறப்பு கட்டண ரயில் வரும் 27-ம் தேதி முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரயில் எண் : 07504 எர்ணாகுளம் - நந்தேடு இடையே இயக்கப்படும் சிறப்புக்கட்டண ரயில் வரும் 27-ம் தேதி (திங்கட்கிழமை) நள்ளிரவு 11 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படுகிறது. 29-ம் தேதி (புதன்கிழமை) நந்தேடுவிற்கு காலை 06.30 மணிக்கு இந்த ரயில் சென்றடைகிறது. 

இந்த ரயிலில் 3 குளிரூட்டப்பட்ட பெட்டியும், ஸ்லீப்பர் வசதியுடன் 10 பெட்டிகளும், பொதுப் பிரிவில் 3 மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல 2 பெட்டிகளும் என மொத்தம் 18 பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

எர்ணாகுளம் - நந்தேடு ரயில்கள் நின்று செல்லும் நிறுத்தங்கள் : அலுவா, திருச்சூர், ஒத்தப்பாலம், பாலக்காடு, கோவை ரயில்நிலையம், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திருத்தனி, ரேணிகுண்டா, கொடுர், ராஜம்பேட்டா, நந்தலூர், கடப்பா, எர்ரகுண்ட்லா, மத்தனூர், ததிபத்ரி, கூட்டி, தோனே, குர்னூல் சிட்டி, கேட்வால், வானாபார்தி சாலை, மக்பூப்நகர், ஜெட்செர்லா, கச்சேகுடா, மல்காஜ்கிரி, பொலாரும், கமரெட்டி, நிஷமதாபாத், பஷார், தர்மாபாத்,முக்ஹெத் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்கின்றன. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...