வெள்ள பாதிப்பால் கேரளாவிற்கு இயக்கப்படும் ரயில்களின் சேவையில் மாற்றம்

கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு போன்ற காரணங்களால் பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளுக்குட்பட்டு இயக்கப்படும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு போன்ற காரணங்களால் பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளுக்குட்பட்டு இயக்கப்படும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- சொர்ணூர் - கோழிக்கோடு மற்றும் எர்ணாகுளம் - கோட்டம் - கயம்குளம் ஆகியவற்றிற்கு இடையே இயக்கப்படும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று இயக்கப்படவிருந்த ரயில் எண் : 12624. திருவனந்தபுரம் - சென்னை மெயிலின் சேவை முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பகுதி இயக்கப்படும் ரயில்கள் (ஆக.,20) : 

ரயில் எண் : 12696. திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸின் திருவனந்தபுரம் - பாலக்காடு இடையிலான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பாலக்காட்டில் இருந்து நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் புறப்படும். 

 

ரயில் எண் : 22640. அலப்பி - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் கோவையில் இருந்து நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இருந்து தனது சேவையை தொடங்கும். ஆனால், அலப்பி - கோவை இடையிலான சேவை மட்டும் ரத்து செய்யப்படுகிறது. 

ரயில் எண் : 22643. எர்ணாகுளம் - பாட்னா எக்ஸ்பிரஸின் சேவையானது, எர்ணாகுளம் - கோவை இடையே ரத்து செய்யப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் கோவையில் இருந்து பாட்னாவிற்கு பயணிகள் ரயில் இயக்கப்படும். 

 

ரயில் எண் 12777 ஹுப்ளி ரயில் - கொச்சிவேலி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் கோவையில் இருந்து ஹுப்ளி ரயில்நிலையத்திற்கு, பிற ரயில்களி சேவை இல்லாத போது இயக்கப்படுகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...