வால்பாறை, ஆனைமலை மற்றும் ஆழியார் பகுதிகளில் 3 நாட்களுக்கு சுற்றுலாச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

கோவை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், வால்பாறை, ஆனைமலை மற்றும் ஆழியார் பகுதிகளுக்கு அடுத்த 3 நாட்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கோவை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், வால்பாறை, ஆனைமலை மற்றும் ஆழியார் பகுதிகளுக்கு அடுத்த 3 நாட்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வால்பாறை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. 

இந்நிலையில், வால்பாறை பகுதியில் உள்ள நீர்நிலைகள் மட்டுமின்றி, சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனால், வால்பாறை பேருந்து நிலையத்தில் தண்ணீர் தேங்கி உள்ள நிலையில், பேருந்துகள் இயக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டுது. 



எனவே, வால்பாறை, ஆனைமலை மற்றும் ஆழியார் பகுதிகளுக்கு சுற்றுலா வருவதை அடுத்த மூன்று நாட்களுக்கு தவிர்க்குமாறு கோவை மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...