தொடரும் கனமழையால் ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே சார்பில் இலவச உதவி எண் அறிவிப்பு

கோவை: கேரளா மற்றும் பல்வேறு பகுதிகளில் பெய்யும் தொடர் மழையினால் ரயில்சேவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான தகவல்களை அறிய தெற்கு ரயில்வே சார்பில் இலவச உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் கேரளாவில் கடந்த சில நாட்கள் பேய் மழை பெய்து வருகிறது. இதனால், நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. மேலும், சாலை மற்றும் வான்வழிப் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோல, கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத மழையினால் திருவனந்தபுரம் ரயில்நிலையத்திற்கு வரும் ரயில்கள் பிற பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரயில்சேவையில் மாற்றம், ரத்து, பகுதி வரை இயக்கப்படும் ரயில்கள் போன்ற தகவல்களை பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில், பயணிகளின் பாதுகாப்பிற்காக மாவட்ட வாரியாக தெற்கு ரயில்வே சார்பில் இலவச உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கோவை (0422-2304842) 

திருப்பூர் (0421-2200568)

ஈரோடு (0424-2284812) 

சேலம் (0427-2330194)

கரூர் (04324-232139) 

ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...