அமராவதி ஆற்றுக்கு நீர்வரத்து வினாடிக்கு 32,000 கன அடியாக அதிகரிப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தது மாவட்ட நிர்வாகம்

திருப்பூர்: அமராவதி அணைக்கு கடந்த 24 ஆண்டுகளுக்கு பிறகு 32,000 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பால் கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


திருப்பூர்: à®…மராவதி அணைக்கு கடந்த 24 ஆண்டுகளுக்கு பிறகு 32,000 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பால் கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 



உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி கொள்ளளவு கொண்டது. தற்போது அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால், இன்று காலை முதல் அணைக்கு மூணாறு. பாம்பாறு மற்றும் சின்னாறு வழியாக வினாடிக்கு 32,000 கன அடி நீர்வரத்து உள்ளது.

அணையின் பாதுகாப்பு மற்றும் முழு கொள்ளளவை எட்டியதன் காரணமாக அமராவதி ஆற்றில் வினாடிக்கு 32,000 கன அடி வீதமும் புதுவாய்க்காலில் 440 கன அடி வீதமும், தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் மூணாறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், அணை முழுமையாக நிரம்பியுள்ளதால் உபரியாக வரும் நீர்வரத்தை அமராவதி ஆற்றில் திறந்து விடப்படுவதால் கல்லாபுரம், மடத்துக்குளம், தாராபுரம், சின்னதாராபுரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட கரையோர பகுதி மக்களுக்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 



மேலும், கரையோர பகுதி மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய அளவில் நீா்வரத்து வந்து கொண்டிருப்பதாக பொதுப்பணி துறை அதிகாரிகள் கூறினர். கரையோர மக்களுக்கு வெள்ளம் தொடர்பான அவசர உதவிக்கு 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...