இரண்டு மாதங்களில் 4-வது முறையாக நிரம்பியது பில்லூர் அணை: பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கோவை : தொடர் கனமழையினால் பில்லூர் அணை மீண்டும் அதன் கொள்ளளவை எட்டியுள்ளதால், பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை : தொடர் கனமழையினால் பில்லூர் அணை மீண்டும் அதன் கொள்ளளவை எட்டியுள்ளதால், பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீலகிரி மாவட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் குந்தா, அப்பர் பவானி, அவலாஞ்சி போன்ற அணைகள் முழுவதும் நிரம்பி அதன் உபரி நீர் பில்லூர் அணைக்கு திறக்கப்பட்டுள்ளது. இதனால், பில்லூர் அணை முழு கொள்ளளவான 100 அடியில் 97 அடிக்கும் மேல் உயர்ந்துள்ளது. இதனையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி அணையின் 4 மதகுகளின் வழியே 30,000 கனஅடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.



மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவிலை மூழ்கடித்தவாறு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே, ஆற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிக்கு செல்லுமாறும், ஆற்றினை கடக்கவோ அல்லது மீன் பிடிக்க செல்லவோ வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார். 

மேலும், நெல்லித்துரை, ஆலாங்கொம்பு, வச்சினம்பாளையம், லிங்காபுரம் உள்ளிட்ட ஆற்றின் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களில் மட்டும் பில்லூர் அணை, தற்போது 4-வது முறையாக நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.



Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...