அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருப்பூர்: அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருப்பூர்: à®…மராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையில் இன்று காலை 7 மணி நிலவரப்படி 87.96 அடி நீா் இருப்பு உள்ளது. இந்த அணைக்கு பாம்பாறு மற்றும் சின்னாறு வழியாக வினாடிக்கு 2,966 கன அடி நீா் வந்து கொண்டிருப்பதால் அணையின் பாதுகாப்பு மற்றும் முழு கொள்ளளவை எட்டியதன் காரணமாக அமராவதி ஆற்றில் வினாடிக்கு 2,440 கன அடி வீதமும், புதுவாய்க்காலில் 440 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.



கேரளா மாநிலம் மூணாறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் உபரியாக வரும் நீர்வரத்தை அமராவதி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

இந்த சூழலில், கல்லாபுரம், மடத்துக்குளம் தாராபுரம், சின்னதாராபுரம் மற்றும் அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், கரையோர பகுதி மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளம் தொடர்பான அவசர உதவிக்கு 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...