ரயில் நேரங்கள் மாற்றம்

கோவை: திருப்பூர் முதல் கோவை வரையில் ரயில் தண்டவாள சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை: திருப்பூர் முதல் கோவை வரையில் ரயில் தண்டவாள சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

ரத்து

வண்டி எண்.66602/66603 கோவை-சேலம் மற்றும் பயணிகள் ரயில் ஆகஸ்ட் 2 மற்றும் 4 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

மாற்றங்கள் (30-7-2018) 

வண்டி எண்.13352 ஆழப்புழா-தன்பாத் விரைவு ரயில் கோவைக்கு 70 நிமிடங்கள் தாமதமாக வந்தடையும். இந்த ரயில் கோவையில் இருந்து 12 மணிக்கு கிளம்புவதாக இருந்தது. ஆனால், இன்று 13.10 மணிக்கு புறப்படும்.

வண்டி எண்.12678 எர்ணாகுளம்-கேஎஸ்ஆர் பெங்களூர் விரைவு ரயில் கோவைக்கு 35 நிமிடங்கள் தாமதமாக வந்தடையும். இந்த ரயில் கோவையில் இருந்து 12.50 மணிக்கு கிளம்புவதாக இருந்தது. ஆனால், இன்று 13.25 மணிக்கு புறப்படும்.

மேலும், வண்டி எண்.16859 (சென்னை-மங்களூர்), வண்டி எண்.13351 (தன்பாத்-ஆழப்புழா), வண்டி எண்.12677 (பெங்களூர்-எர்ணாகுளம்), வண்டி எண்.12675 (சென்னை-கோவை) ஆகிய ரயில்கள் 15 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.   

மாற்றங்கள் (2-8-2018) / (4-8-2018) 

வண்டி எண்.12970 ஜெய்ப்பூர்-கோவை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஈரோட்டில் இருந்து 40 நிமிடங்கள் தாமதமாக புறப்படும். இது வரும் 4-ம் தேதிக்கும் பொருந்தும்.

மேலும், வண்டி எண். 12676 (கோவை-சென்னை), வண்டி எண். 12244 (கோவை-சென்னை), வண்டி எண். 22646 (திருவனந்தபுரம்-இன்டோர்), வண்டி எண். 16860 (மங்களூர்-சென்னை), வண்டி எண். 17229 (திருவனந்தபுரம்-ஹைதராபாத்), வண்டி எண். 66608 (பாலக்காடு-ஈரோடு பயணிகள் ரயில்) ஆகிய ரயில்கள் (04.08.2018) பீளமேடு ரயில் நிலையத்தில் இருந்து 15 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...