வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க நவ.30 வரை கால நீட்டிப்பு

கோவை, நவம்பர் 1: வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க மற்றும் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்டவற்றிற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 30ம் தேதியில் இருந்து நவம்பர் 30ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் கோவை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 3ம் தேதி முதல் 31ம் தேதி வரை மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப்பதிவு மையங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், வாக்காளர் பட்டியலில் விடுபட்டோர் மற்றும் 18 வயது நிறைவடைந்தவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக அக்டோபர் 8 மற்றும் 22 ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து வாக்குப் பதிவு மையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

தற்பொழுது இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2018 ஆணையிட்டிருந்த காலம் அக்டோபர் 31ம் தேதியில் இருந்து நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

எனவே, 2018 ஜனவரி 1ம் தேதியன்று 18 வயது பூர்த்தியடையும் நபர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், ஏற்கனவே உள்ள சட்டமன்ற தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆகியோர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பொதுமக்கள் தற்போது வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

நவம்பர் 30ம் தேதி வரை பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 2018 ஜனவரி 5ம் தேதியன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என கோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான திரு. டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...