பட்டாசு கடை அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

2017 அக்டோபர் 18ம் தேதியன்று கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகர காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட (பி1 முதல் பி4, சி1 முதல் சி4, இ1 முதல் இ3 மற்றும் டி1 முதல் டி4 (பி1 முதல் பி 15) வரையிலான காவல் நிலைய எல்லைகள்) பகுதிகளில் தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பங்களை ஜூலை 1ம் தேதி 10 மணி முதல் ஜூலை 31ம் தேதியன்று மாலை 5 மணிக்குள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு கீழ்க்கண்ட ஆவணங்களுடன் தங்களது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

  • விண்ணப்பப்படிவம் 4-ல் ரூ.2 மதிப்புள்ள நீதிமன்ற வில்லை ஒட்டப்பட்டிருக்க வேண்டும். 
  • உரிமக்கட்டணம் ரூ.500 கருவூலத்தில் வங்கியில் செலுத்தியதற்குரிய சலான், இதற்கான சலான் இவ்வலுவலகத்தில் வழங்கப்படும்.
  • பட்டாசு இருப்பு வைத்து விற்கப்படவுள்ள இடத்தின் வரைபடம் 6 நகல்கள், வரைபடத்தின் சம்பந்தப்பட்ட இடத்தின் முகவரி முழுமையாக குறிப்பிடப்பட வேண்டும். மேலும், மனுதாரர் தனது கையொப்பம் இட்டிருக்க வேண்டும்.
  • மாநகராட்சி, பொதுப்பணித்துறை, மற்ற துறை கட்டிடமாக இருப்பின் அத்துறை சார்ந்த அலுவலரின் மறுப்பின்மை கடிதம்.
  • மாநகராட்சி, பஞ்சாயத்திற்கு உரிமக் கட்டணம் செலுத்திய ரசீது.


உள்ளிட்ட ஆவணங்களுடன் ஜூலை 1ம் தேதி முதல் 31ம் தேதி மாலை 5 மணிக்குள் பெறப்படம் முழுமையான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். சம்பந்தப்பட்ட இடங்களை பார்வையிட்டு, விசாரணைக்குப்பின் காவல்துறை கண்ணோக்கில் திருப்தியடையும் பட்சத்தில் மட்டுமே உரிமம் வழங்கப்படும்.

வெடிபொருட்கள் கட்டுப்பாட்டுத்துறை அறிவுரைப்படி சாலை ஓரக்கடைகளுக்கு உரிமம் வழங்கப்படமாட்டாது.

இவ்வாறு கோவை மாநகர காவல் ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...