கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்க்க மற்றும் சீரமைக்க அரசு நிதி உதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழகத்தில் சொந்தக் கட்டிடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்க்க மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நடப்பாண்டில் (2016- 17) நிதி உதவி வழங்கும் திட்டத்தை அரசால் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கான தகுதிகள்

1. கிறித்துவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்தக் கட்டிடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டிட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும். தேவாலயமும் பதிவு செய்திருக்க வேண்டும்.

2. தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது. இதற்கான சான்றிதழ் அளிக்க வேண்டும்.

3. சீரமைப்பு பணிக்காக ஒரு முறை நிதி உதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும்.

விண்ணப்பப் படிவத்தினை பிற்சேர்க்கை- 3 உள்ளவாறு சான்றிதழ் மற்றும் அனைத்து உரிய ஆவணங்களுடன் கோவை மாவட்ட ஆட்சியருக்கு 31.1.2017-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் சான்றிதழ் [email protected] என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

இதில், விண்ணப்பித்த தேவாலயத்தில் மாவட்ட நிர்வாகத்தால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் பரிவர்த்தனை செய்யப்படும்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...