சொத்து வரியை அக்டோபர் 31ம் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு ஊக்கத்தொகை - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2023-24ம்‌ ஆண்டின்‌ இரண்டாம்‌ அரையாண்டிற்கான சொத்துவரியினை 31.10.2023க்குள்‌ செலுத்தும்‌ சொத்து உரிமையாளாகளுக்கு சொத்துவரி தொகையில்‌ 5 சதவீதம்‌ ஊக்கத்தொகை வழங்கப்படும்‌ என்று மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்துள்ளார்.



கோவை: சொத்துவரி தொகையினை ரொக்கம்‌, கடன்‌ மற்றும்‌ பற்று அட்டை காசோலை மற்றும்‌ வரைவோலை மூலமாக மாநகராட்சியின்‌ அனைத்து வரி வசூல்‌ மையங்களிலும்‌, tnurbunepay.tn.gov.in என்ற நகராட்சி நிர்வாக இயக்குநரக இணையதள டிஜிட்டல்‌ பரிவர்த்தனை வாயிலாகவும்‌ செலுத்தலாம்‌ என மாநகராட்சி அறிவித்துள்ளது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2023-24ம்‌ ஆண்டின்‌ இரண்டாம்‌ அரையாண்டிற்கான சொத்துவரியினை 31.10.2023க்குள்‌ செலுத்தும்‌ சொத்து உரிமையாளாகளுக்கு சொத்துவரி தொகையில்‌ 5 சதவீதம்‌ ஊக்கத்தொகை வழங்கப்படும்‌.

மேற்படி சொத்துவரி தொகையினை ரொக்கம்‌, கடன்‌ மற்றும்‌ பற்று அட்டை காசோலை மற்றும்‌ வரைவோலை மூலமாக மாநகராட்சியின்‌ அனைத்து வரி வசூல்‌ மையங்களிலும்‌, tnurbunepay.tn.gov.in என்ற நகராட்சி நிர்வாக இயக்குநரக இணையதள டிஜிட்டல்‌ பரிவர்த்தனை வாயிலாகவும்‌ செலுத்தலாம்‌.

எனவே, மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள்‌ மேற்காணும்‌ வசதியினை முழுமையாக பயன்படுத்தி, 2023-24ம்‌ ஆண்டின்‌ இரண்டாம்‌ அரையாண்டிற்கான தங்களது சொத்துவரியினை அக்டோபர்‌ 31ம்‌ தேதிக்குள்‌ செலுத்தி 5 சதவீதம்‌ வரை ஊக்கத்தொகையினை பெற்று பயனடையுமாறு மாநகராட்சி ஆணையாளா்‌ பிரதாப்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...