குடிநீர் நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணி - உடுமலையில் 2 நாட்களுக்கு குடிநீர் நிறுத்தம்

உடுமலை நகராட்சிக்கு சொந்தமான திருமூர்த்தி நகர் தலைமை குடிநீர் நீரேற்று நிலையத்தில் மின் உந்துகள் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் வரும் 21 மற்றும் 22 ஆகிய இரண்டு நாட்களுக்கு குடிநீர் நிறுத்தப்படும் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: இரண்டு நாட்கள் குடிநீர் நிறுத்தப்படுவதால், பொதுமக்கள் தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சிக்கு சொந்தமான திருமூர்த்தி நகர் தலைமை குடிநீர் நீரேற்று நிலையத்தில் உள்ள மின்உந்துகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

முதல் மற்றும் இரண்டாம் குடிநீர் திட்ட குழாய்களில் ஏற்பட்டுள்ள நீர்கசிவுகளை சரிசெய்ய வேண்டியுள்ளதால் வருகின்ற 21, 22ம் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கு உடுமலை நகர் முழுவதும் குடிநீர் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட உள்ளது. எனவே,பொதுமக்கள் தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு நகராட்சி உடுமலை நகராட்சி நிர்வாகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...