கோவை மாநகராட்சியில் வரும் செப். 16, 17 தேதிகளில் வரிவசூல் முகாம் - மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!

கோவை மாநகராட்சியில் 56, 57, 75, 87, 85, 11, 19, 62, 80 ஆகிய வார்டுகளில் வரும் செப்டம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு வரிவசூல் முகாமை பயன்படுத்தி பொதுமக்கள் மாநகராட்சிக்கான வரி பாக்கியை செலுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.



கோவை: கோவை மாநகராட்சியில் வரும் செப்டம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெறவுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நடப்பு 2023-24ஆம்‌ நிதியாண்டின்‌ முதலாம்‌ அரையாண்டு 30.09.2023 ல்‌ நிறைவடைய உள்ளது. 01.10.2023-க்கு மேல் செலுத்தப்படும்‌ 2023-24 முதலாம்‌ அரையாண்டிற்குரிய சொத்து வரியுடன்‌ கூடுதலாக மாதம்‌ ஒன்றுக்கு 1% வட்டியுடன்‌ சேர்த்து செலுத்தப்பட வேண்டும்‌.

எனவே, பொதுமக்களின்‌ வசதியினை கருத்தில்‌ கொண்டு, முதலாம்‌ அரையாண்டு வரையிலான கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி, குடிநீர்‌ கட்டணம்‌ மற்றும்‌ கடை வாடகை தொகை முதலிய அனைத்து வரி மற்றும்‌ வரியில்லா இனங்களை செலுத்த‌ கீழ்க்கண்ட பகுதிகளில்‌ 16.09.2023 மற்றும்‌ 17.09.2023 சிறப்பு வரிவசூல்‌ முகாம்கள்‌ நடைபெறவுள்ளன.

கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.56 மற்றும்‌ 57 பகுதிகளுக்கு ஒண்டிப்புதூர்‌ - நெசவாளர்‌ காலனி - சுங்கம்‌ மைதானத்திலும்‌, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.75-ல்‌ சீரநாயக்கன்பாளையம்‌ நேத்தாஜி ரோடு-மாரியம்மன்‌ கோவில்‌ முன்புறப்‌ பகுதியிலும்‌, தெற்கு மண்டலத்தில் வார்டு 87-ல்‌ வசந்தம்‌ நகர்‌-பிரின்ஸ்‌ கார்டன்‌ பகுதியிலும்‌, வார்டு எண்‌.85-ல்‌ கோணவாய்க்கால்பாளையம்‌ - மாநகராட்சி துவக்கப்‌ பள்ளியிலும்‌, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.11-ல்‌ ஜனதா நகர்‌ சூர்யா கார்டன்ஸ்‌ பகுதியிலும்‌, வார்டு எண்‌.19.ல்‌ மணியகாரன்பாளையம்‌ அம்மா உணவகத்திலும்‌, மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.62 சாரமேடு மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும்‌, வார்டு எண்‌ 80.ல்‌ கெம்பட்டி காலனி மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும்‌ நடைபெற உள்ளது.

எனவே, வருகின்ற 16.09.2023 மற்றும்‌ 17.09.2023 தேதிகளில்‌ மேற்குறிப்பிட்ட சிறப்பு முகாம்கள்‌ உட்பட மாநகராட்சியின்‌ அனைத்து வரிவசூல்‌‌ மையங்களும்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 6.00வரை வழக்கம்‌ போல்‌ செயல்படும்‌.

இந்த வசதியினை முழுமையாக பயன்படுத்தி பொதுமக்கள்‌ மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நடப்பு 2023-24ஆம்‌ முதலாம்‌ அரையாண்டு வரையிலான நிலுவைகளை‌ செலுத்தி மாநகராட்சியின்‌ வளர்ச்சிப்‌ பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...