தாராபுரம் ஐ.டி.ஐ.யில் மாணவ-மாணவிகள் சேர்க்கை - விண்ணப்பிக்க 23ம் தேதி கடைசி நாள்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இயங்கி வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்பிரிவுகள் மற்றும் இதர தொழிற்பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்கு நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ளவர்கள் வரும் 23ம் தேதி வரை நேரில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: ஐ.டி.ஐ.யில் பயிற்சி பெறுபவர்களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன், தமிழ்நாடு அரசின் சலுகை மற்றும் உதவித்தொகை வழங்கப்படும் என்று அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் முதல்வர் பிரபு தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இயங்கி வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்பிரிவுகள் மற்றும் இதர தொழிற்பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்கு நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.

8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 10 மற்றும் 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், பொறியியல், தொழில்நுட்ப படிப்புகளான இன்டஸ்டிரி 4.0 மற்றும் பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெறலாம்.

ஐ.டி.ஐ.யில் பயிற்சி பெறுபவர்களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன், தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள் மற்றும் குறிப்பிட்ட சில தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு டூல் கிட், தையல் எந்திரம் விலையில்லாமல் வழங்கப்படும், ஆண் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.750 மற்றும் தகுதி வாய்ந்த பெண் பயிற்சியாளர்களுக்கு புது மைப்பெண் திட்டத்துடன் இணைந்து மதாந்திர உதவித்தொகை ரூ.1,750 வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு இன்டர்ஷிப் பயிற்சி மற்றும் ரூ.15 ஆயிரம் முதல்-ரூ.20 ஆயிரம் வரை சம்பளத்துடன் முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும்.

விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் தாராபுரம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் "சேர்க்கை உதவி மையத்தில்" வருகிற 23-ந்தேதி வரை நேரிலே விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04258-230307 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் முதல்வர் பிரபு தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...