கோவையில் எங்கெல்லாம் விநாயகர் சிலைகள் கரைக்கலாம்..!! இடங்கள் பற்றி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

கோவையில் முத்தண்ணன் குளம், பவானி ஆறு, அம்பராம்பாளையம் ஆறு, நொய்யல் ஆறு, உப்பாறு, நடுமலை ஆறு, ஆனைமலை முக்கோணம் ஆறு, சிறுமுகை பழந்தோட்டம், சாடி வயல், வாளையார் அணை, ஆழியாறு ஆத்துப்பாறை, குறிச்சி குளம், குனியமுத்தூர் குளம், சிங்காநல்லூர் குளத்தேரி உட்பட 15 நீர்நிலைகளில் விநாயகர் சிலை கரைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.


கோவை: சுற்றுச்சூழலை மாசு படுத்தாத சிலைகளை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழாவை தொடர்ந்து பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படும். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான இடங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி முத்தண்ணன் குளம், பவானி ஆறு(சிறுமுகை, எலகம்பாளையம், மேட்டுப்பாளையம் சுப்ரமணியர் கோவில், தேக்கம்பட்டி), அம்பராம்பாளையம் ஆறு, நொய்யல் ஆறு, உப்பாறு, நடுமலை ஆறு, ஆனைமலை முக்கோணம் ஆறு, சிறுமுகை பழந்தோட்டம், சாடி வயல், வாளையார் அணை, ஆழியாறு ஆத்துப்பாறை, குறிச்சி குளம், குனியமுத்தூர் குளம், சிங்காநல்லூர் குளத்தேரி, வெள்ளக்கிணறு குளம் ஆகிய 15 நீர்நிலைப் பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை மாசு படுத்தாத சிலைகளை மட்டுமே இந்த இடங்களில் கரைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...